• Jul 24 2025

தந்தையின் இறப்பிலும்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த அஜித்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் தந்தை தனது 85ஆவது வயதில் பக்கவாத நோயால் இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இதற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் அஜித் தனது ரசிகர்களுக்காக வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.


அதாவது "தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க நாங்கள் கருதுகிறோம். 


எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த நீங்கள் அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்" என கோரிக்கை விடுத்துள்ளார் அஜித்.

Advertisement

Advertisement