• Jul 26 2025

தந்தையின் இறுதிச் சடங்கில் குடும்பத்துடன் கலந்து கொண்ட அஜித்- இறுதி ஊர்வல புகைப்படங்கள் இதோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். அவரின் மறைவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.85 வயதான அஜித்தின் தந்தை உயிரிழந்ததற்கு திரைப்பிரபலங்கள் அஜித்தின் தீவிர ரசிகர்கள் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவரது உடலானது பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்குக் கொண்டு சொல்லப்பட்டது. கிழக்கடற்கரைச் சாலையில் இருந்த அவரது வீட்டிலிருந்தே உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்று கூறப்பட்டது.


மேலும் இந்த இறுதிச்சடங்கில் அஜித்துடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், அஜித் குமார் தந்தையின் இறுதி சடங்குகள் தற்போது நடைபெற்று வருகிறது.


இதில் தனது தந்தையின் உடலை மின் மயானத்திற்கு அஜித் தூக்கி செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி அனைவரையும் கணகலங்க வைத்துள்ளது. இதோ அந்தப் புகைப்படங்கள்



Advertisement

Advertisement