• Jul 23 2025

காதல் மனைவியின் பிறந்த நாளை சூப்பராக கொண்டாடிய அஜித்- வெளியாகிய ரொமாண்டிக் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் அஜித். தனக்கான ஒரு பாணியில் சினிமாவில் கலக்கி வரும் இவர் எந்தவொரு சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டாதவராகவும் இருந்து வருகின்றார்.எனவே இவர் எப்போது சமூக வலைத்தளங்களில. இணைவார் என இவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இவரது நடிப்பில் தற்பொழுது துணிவு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.எச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுககு வெளியாகும் என்றும் ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.


மேலும் இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாகவும் ரசிகர் மனதில் இடம் பிடித்த நடிகை ஷாலினியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு அனோஷா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.


இந்த நிலையில் நடிகை ஷாலினியின் பிறந்தநாள் பார்ட்டி நேற்று நடைபெற்றுள்ளது

இந்த பார்ட்டியை அஜித் விமர்சையாக கொண்டாடியுள்ளார். இந்த பார்ட்டியில் நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.


பிறந்தநாள் பார்ட்டியில் அஜித் - ஷாலினி ஜோடி இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளதைக் காணலாம்.





Advertisement

Advertisement