• Jul 23 2025

சரவணனைத் தூண்டி விடும் சந்தியா- செய்வது அறியாது தவிக்கும் சிவகாமி- பரபரப்பான திருப்பங்களுடன் ராஜா ராணி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எப்பிசோடில் கபடி போட்டி நடக்க சந்தியா சூப்பரா இருக்க விளையாட அப்துல் சீரியஸாக விளையாடி ஜெயிக்க வேண்டும் என முயற்சி செய்கிறது. அதற்கேற்றார் போல சந்தியாவின் டி மில் எல்லோரும் அவுட் ஆக கடைசியில் சந்தியா மட்டுமே மிச்சம் இருக்கிறார்.

சந்தியாவை அவுட் செய்ய அப்துல் வர கடைசியில் அப்துலை அவுட் செய்து அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் கோபமாக ரூமுக்கு போகும் அப்துல் போயும் போயும் சந்தியாவிடம் தோத்துட்டியே என கண்ணாடி முன்பு நின்று கோபப்பட்டு பேசுகிறார். இதை எடுத்து இனி சந்தியாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லைனா டிராஃபிய அடிச்சிட்டு போய்டுவா என யோசிக்கிறார்.


இதனையடுத்து சந்தியா, சரவணனுக்கு போன் போட்டு கபடியில் ஜெயித்த விஷயத்தில் சொல்ல சரவணன் தனக்கு எதிராக தேர்தலில் செந்தில் நிற்பது குறித்து பேசுகிறார். எந்த காரணத்தை கொண்டும் நீங்க தேர்தலில் பின் வாங்க கூடாது என சொல்ல சரவணன் இப்போதுதான் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு என கூறுகிறார்.


அதன் பிறகு சிவகாமி வருத்தமாக இருக்க அவரது கணவர் ரவி ஆறுதல் கூறுகிறார். தேர்தலில் இரண்டு பேரும் நிக்காம போனா கூட சந்தோஷம்தான் நாளைக்கு மனு தாக்கல் என்ன நடக்க போகுதுன்னு தெரியல என புலம்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement