• Jul 24 2025

மேடையில் நடனமாடிய அஜித்... கண் வெட்டாமல் புன்முறுவலுடன் ரசித்த ஷாலினி... வைரலாகும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் அஜித். தனது கடந்த கால வாழ்க்கையில் ஒரு பைக் மெக்கனியாக இருந்த இவர் ஒன்று உலகமே திரும்பி பார்க்கும் நட்சத்திர நாயகனாக விளங்கி வருகின்றார். அத்தோடு தமிழகத்தில் மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களிலும் இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அதுமட்டுமன்றி பல ரசிகர் மன்றங்களையும் அமைத்து வருகின்றனர்.



இவ்வாறாக நடிப்பு, நடனம், அழகு என அனைத்து விதமான கலை நயனங்களையும் கைவசம் கொண்டுள்ள நம்ம தல அஜித் தற்போது 'ஏகே 61' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எச். வினோத் என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இந்தப் படமானது அடுத்த வருடம் வெளியாகும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.


இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' என்ற படத்திலும் நடிக்கவிருக்கின்றார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில்உருவாகும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புக்கள் வெளியாகி இருக்கின்றன.



இந்த நிலையில் அஜித்தின் அன்சீன் வீடியோக்கள், புகைப்படங்கள் என்பன வெளியாகி அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழமை. அந்த வகையில் தற்போது நம்ம தலயின் நடன வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நடன கலைஞர்கள் விழாவிற்கு வந்திருந்த அஜித் அந்நிகழ்வில் பலரும் அன்போடு கேட்டதற்காக மேடையில் நடனம் ஒன்றினை ஆடிஇருக்கின்றார்.



இந்த வீடியோ ஆனது அஜித் நடனமாட அவரது மனைவி ஷாலினி ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றது. இதனை பார்த்த நம்ம தல ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? அந்த வீடியோவை சமூக வலைதளத்தளங்களில் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Advertisement