• Jul 24 2025

காருக்குள் இளம் பெண்ணுடன் கசமுசா... போலீஸாரிடம் மாட்டிய நாக சைதன்யா... அந்தப் பெண் யாராக இருக்கும்..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக மாறி வருபவர் நடிகர் நாக சைதன்யா.இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனாவார். ஐவரும் தனது தந்தையை போல் சினிமாவில் பல படங்களில் நடித்து ஹீரோவாக ஜொலித்து வருகிறார். 


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் நடிகை சமந்தாவை காதலித்து வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எனினும் திருமணம் ஆகி நான்கே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.



தனது மனைவி சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் சினிமாவில் தொடர்ந்து பிஸியாக கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா சமீபத்தில் வெளியான 'லால் சிங் சத்தா' என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் கால் பதித்திருக்கின்றார். இப்படத்தில் இவர் நடிகர் அமீர்கானுக்கு நண்பனாகவும், இராணுவ வீரராகவும் நடித்திருந்தார். 


இப்படத்தின் புரமோஷன் நிகழ்வானது சமீபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யாவிடம் தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டிருந்தார். அதில் ஒன்றாக "எப்போதாவது போலீஸிடம் தப்பு பண்ணி மாட்டி உள்ளீர்களா" என்ற கேள்வியை கேட்டார். 


இதற்கு பதிலளிக்கும் வகையில் நாகசைதன்யா, தான் ஒருமுறை காரில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது வசமாக சிக்கியதாகவும், இது ஐதராபாத்தில் நடந்ததாகவும் கூறியுள்ளார். நாக சைதன்யா சொன்ன பதிலைக் கேட்டவுடன் அந்த தொகுப்பாளர் "சிக்கியபோது பயமாக இருந்ததா" எனக் கேட்டார். அதற்கும் "சிக்கியபோது பயமாக இல்லை" எனக் கூறிய நாக சைதன்யா, சொல்றதுக்கு ஒரு கதையாவது ஆச்சேனு நினைச்சேன்" என்று கூறினார்.


மேலும் "அந்த காருக்குள் நான் என்ன செஞ்சேங்கிறது எனக்கு மட்டுமே தெரியும்" எனவும் சிரித்தபடி கூறி உள்ளார் நாக சைதன்யா. அவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா? அந்த பெண் யாராக இருக்கும் என நாக சைதன்யாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமன்றி இந்த விடயம் சமந்தாவுக்கு தெரியுமா எனவும் நெட்டிசன்கள் தமது பாணியில் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement