• Jul 25 2025

அஜித் மொபைல் ஃபோனே பயன்படுத்துவதில்லையா?- அப்போ யார் மூலம் தொடர்பில் இருக்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தற்போதைய நாகரீக  வாழ்க்கையில், இளையவர் முதல் பெரியவர் வரை அனைவரது கையிலும்  மொபைல் போன் இருக்கின்றது.எல்லோருமே அவரவர்க்ளின் வசதிக்கேற்ப மொபைல் போன்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மொபைல் இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்டது.

அப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் குமாரிடம் மொபைல் இல்லை என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா?  இதனை நம்பித்தான் ஆகவேண்டும். நடிகை த்ரிஷாவே அதனை உறுதி செய்துள்ளார்.


நம்ம தல அஜித் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் மங்காத்தா, என்னை அறிந்தால், கிரீடம், ஜி, பூர்ணா மார்க்கெட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்களை அடுத்து அஜித் நடிக்கும் ஏகே62ஆவது படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது . 

இதற்கிடையில் கடந்த வாரம் த்ரிஷா நடிப்பில் உருவான ராங்கி படம் வெளியானது. இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்து கொண்டார். அப்போது, த்ரிஷாவிடம், அஜித் குமாரின் மொபைல் நம்பரை எண்ணவாக நீங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அந்த கேள்விக்கு த்ரிஷா, அஜித் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. அவருடன் இருக்கும் அவரது உதவியாளர் மூலமாக தான் அஜித்தை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சியான விடயமாக  இருந்தாலும் இது தான் உண்மை என்பதை மறுக்க முடியாது.


 ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு தனது தொடர்பு எண்ணை மாற்றிக் கொண்டே இருப்பாராம். ஏனென்றால், வேறொரு படத்தில் பிஸியாக இருக்கும் போது முந்தைய படக்குழுவினர்கள் யாரும் தன்னை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அஜித் கண்ணும் கருத்துமாக இருப்பாராம். அஜித் சமூக வலைதள பக்கத்தில் கூட இருப்பதில்லை. அஜித்திற்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பைக் ரேஸ் தானாம்.

அஜித்தின் மனைவி ஷாலினியிடம் மொபைல் போன் உள்ளது. அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்ததுடன் அதிக லைக்குகளையும் குவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement