• Jul 26 2025

கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த ஷகிலாவுக்கு ஓடிப் போய் உதவி செய்த கஞ்சா கருப்பு- தீயாய்ப் பரவி வரும் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷகீலா.இவர் மலையாளத்தில் கடவாய்ப்புக் குறைந்ததை அடுத்து படவாய்ப்பின்றி தவித்து வந்தார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார். அத்தோடு இந்த நிகழ்ச்சியானது இவருடைய கெரியரில் மிகப் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது.அவர் மீதான கவர்ச்சி பார்வையை மாற்றியதால், பல படங்களில் குணசித்ர வேடத்திலும் ஷகிலா நடித்து வருகிறார். அதே போல்,  ஊடகங்களிலும்,  பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.


அந்த வகையில் அண்மையில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விழா, மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஷகீலா, கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷகிலா, மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்தும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் மிகவும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்தார். மேலும் தாழ்வு மனப்பான்மையுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் பற்றியும் ஷகிலா பேசினார். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை கேலி செய்யும் விதமாக திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.


இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது... பல ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க போட்டி போட்ட நிலையில், ஷகிலா கூட்ட நெரிசலில் சிக்கினார். இதனை கண்ட கஞ்சா கருப்பு, பவுன்சர்கள் உதவியுடன்... ஷகிலாவை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளார் இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement