• Jul 24 2025

'காசேதான் கடவுளடா' பாடலில் தான் அணிந்திருந்த கண்ணாடியை.. பிக்பாஸ் பிரபலத்திற்கு தூக்கிக் கொடுத்த அஜித்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனான அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'துணிவு'. அதாவது 'நேர்கொண்ட பார்வை, வலிமை' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் குமார், இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் 3ஆவதாக இப்படம் உருவாகியுள்ளது.


அஜித்தைப் பொறுத்தவரையில் எப்போதும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்காக பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வார் என பலரும் சொல்லி நாம் கேள்விப் பட்டிருப்போம். குறிப்பாக அவர் கையால் சமைத்து எல்லோரையும் சாப்பிட வைப்பது உள்ளிட்ட பல விஷயங்களை அஜித் செய்து வருவது வழமை.

இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் தனக்கு கொடுத்த கிப்ட் பற்றி பிக்பாஸ் பிரபலமான நடிகர் சிபி சந்திரன் பேசி உள்ளார். அதாவது துணிவு படத்தில் அஜித் டீமில் இருக்கும் நபராக தான் சிபி நடித்து இருக்கிறார். 


இந்த படத்தில் வரும் 'காசேதான் கடவுளடா' என்ற பாடலானது நேற்றைய தினம் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த பாடலின் ஷூட்டிங்கில் தான் அஜித் எனக்கு ஒரு கண்ணாடி கிப்ட்டாக கொடுத்தார் என சிபி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது காசேதான் கடவுளடா பாடலில் அஜித் அந்த கண்ணாடி அணிந்து தான் ஆடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement