• Jul 23 2025

அஜித் நடிப்பில் வெளியாகிய காதல் கோட்டை திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?- பாக்ஸ் ஆபிசில் சாதனையாம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இதை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ஏகே 62. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்காக தான் அஜித் ரூ. 105 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.அஜித்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஒன்று காதல் கோட்டை. சொல்லப்போனால், அஜித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையே இப்படம் தான்.


அகத்தியன் இயக்கியிருத்த இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்து அன்றைய காலகட்டத்தி பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது என்பதும் முக்கியமாகும்.


மேலும் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஷுட்டிங் தாமதமாவதால் அஜித் தற்பொழுது சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார். அவர் சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதும் என்பதும் குறிப்பிடத்தக்து


Advertisement

Advertisement