• Jul 24 2025

அஜித்தா, விஜய்யா பெரிய நடிகர்... த்ரிஷாவின் சூப்பர் பதில் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக தமிழகத்தில் அஜித் பெரிய நடிகரா இல்லை விஜய் பெரிய நடிகரா என்று ரசிகர்கள் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காரணம் விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்திருக்கும் தில் ராஜு தான். ஏனெனில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் விஜய் தான் நம்பர் ஒன்" எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில் அஜித், விஜய் மற்றும் நம்பர் விளையாட்டு பற்றி த்ரிஷாவிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தன் ஸ்டைலில் அழகாக பதில் அளித்திருக்கிறார். இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. 


அதில் த்ரிஷா கூறுகையில் "எனக்கு நம்பர் விளையாட்டில் நம்பிக்கை இல்லை. உங்களின் கடைசி படத்துடன் சேர்ந்து வருவது தான் நம்பர். கடைசி படம் நன்றாக போனால் நீங்கள் தான் நம்பர் ஒன். சமீபத்தில் உங்களின் படம் எதுவும் ரிலீஸாகவில்லை என்றால் வேறு யாரோ ஒருவர் அந்த இடத்தில் இருப்பார்" என்றார்.


இதுதொடர்பாக த்ரிஷா மேலும் கூறுகையில் அஜித்தா, விஜய்யா என்று என்னால் ஒருவரை தேர்வு செய்ய முடியாது. நான் நடிக்க வரும் முன்பே அவர்கள் இருவரும் பெரிய ஆட்கள். ரசிகையாக அவர்களின் படங்களை பார்க்கிறேன்.

அவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் இந்த நம்பர் விளையாட்டை நாம் தான் ஆரம்பித்து வைத்தோம் என்று நினைக்கிறேன். இரண்டு பேருமே மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள். அப்படி இருக்கும்போது அதில் யார் பெரியவர் என்று என்னால் எப்படி சொல்ல முடியும்" என அசத்தலாகப் பதிலளித்திருக்கின்றார். 

Advertisement

Advertisement