• Jul 25 2025

மகனின் பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடிய யோகிபாபு- யாரெல்லாம் சென்றிருக்கிறாங்க என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்பொழது தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் யோகிபாபு. இவர் ரஜினிகாந்த்,  அஜித்குமார், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்துள்ளார். 


இது தவிர கதாநபயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்த  கூர்கா, தர்மபிரபு, மண்டேலா போன்ற படங்கள் கவனத்தைப் பெற்றன.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு  மஞ்சு பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்து கொண்டார்.


இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு விசாகன் என பெயரிட்டார்

சில மாதங்களுக்கு முன் யோகி பாபு & மஞ்சு பார்கவி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது மகன் விசாகனின் இரண்டாவது பிறந்தநாள் மற்றும் மகளுக்கு பெயர் சூட்டு விழாவை தனது வீட்டில் நடத்தினார்.


 இந்த விழாவில் நடிகர் பார்த்திபன் & அமைச்சர் மா. சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "வாழ்க்கையில் வெற்றி பெறுவதை காட்டிலும்,வாழ்க்கையையே வெற்றிகொள்வதே சாமர்த்தியம் என்பதை நிரூபித்துள்ள நடிகர் யோகிபாபு வின் குழந்தைகளின் பெயர் சூட்டல் மற்றும் பிறந்த நாள் நிகழ்வில் மகிழ்வுடன் கலந்துகொண்டேன்..." என அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்.


தற்போது யோகி பாபு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர், விஜய் நடிக்கும் வாரிசு, ஷாருக்கான் நடிக்கும் ஜவான் ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement