• Jul 24 2025

கருணாநிதி முன் அரசியல் வேண்டாம் என்று தைரியமாகக் கூறிய அஜித்.. உடனே எழுந்து நின்று கை தட்டிய ரஜினி... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் தலை சிறந்த அரசியல் வாதிகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் கலைஞர் கருணாநிதி. இவர் வாழுகின்ற காலத்தில் பல விழாக்களும் நடாத்தப்பட்டு வருவது வழமை. அந்தவகையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு கடந்த 2010ஆம் ஆண்டு 'பாசத்தலைவனுக்கு பாராட்டு' என்ற பெயரில் விழா நடத்தப்பட்டது. 


இந்த விழாவிற்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவராகக் கலந்து கொண்டு மேடையில் பேசிய அஜித், "கலைஞர் அய்யாவிற்கு ஒரு வேண்டுகோள், இனிமேல் சென்சிட்டிவான விடயங்களுக்கும், சமூக விடயங்களுக்கும் இண்டஸ்ட்ரி தலையிட வேண்டாம் என்று நினைக்கிறன்.

ஒவ்வொரு முறையும் இப்படியொரு விடயம் நடக்கும் பொழுது இண்டஸ்ட்ரியில் பொறுப்பில் இருக்கும் சிலர் எங்களை கட்டாயப்படுத்தி இந்த விழாவிற்கு வரவழைக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் இங்கு வருகிறோம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாக இணைக்காதீர்கள்" என்று பேசியிருந்தார் அஜித்.


அஜித்தின் இந்த துணிச்சலான பேச்சை கேட்டவுடன் கலைஞர் அருகில் அமர்ந்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடனடியாக எழுந்து நின்று கைதட்டினார். அஜித்தின் தைரியமான பேச்சு இன்று வரை திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

ஏனென்றால் இந்த அளவிற்கு அன்றைய முதல்வர் முன் தைரியமான பேச்சை வேறு எந்த நடிகரும் எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவை, திடீரென சில நாட்களாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement