• Jul 25 2025

தந்தையின் மறைவிற்கு பிறகு வெளியே வந்த அஜித்- தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்  திரையுலகில் தனது ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு நடிகர்.அத்தோடு ரசிகர் மன்றத்தை கலைத்தது, பட புரொமோஷன் படம் தான் செய்ய வேண்டும், நான் இல்லை என இருப்பது இப்படி பல விஷயங்கள் மூலம் தனி மனிதராக இவர் அடையாளப்படுத்தப்படுகிறார்.

அத்தோடு துணிவு படத்தை முடித்த கையோடு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் விக்னேஷ் சிவன் கூட்டணி அமையவில்லை, தற்போது மகிழ் திருமேனியுடன் தான் அஜித் அடுத்த படம் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அஜித்தின் தந்தை சுப்ரமணியம் அவர்கள் கடந்த மார்ச் 24ம் தேதி உயிரிழந்தார்.அத்தோடு அவரின் இறப்பிற்கு பல திரைப் பிரபலங்களும், அரசியல் வாதிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.

எனினும் தற்போது தந்தையின் இறப்பிற்கு அஜித் வெளியே வந்தபோது ஒரு ரசிகருடன் வீடியோ எடுத்துள்ளார்.ரசிகர்களால் அந்த குட்டி வீடியோ அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.




Advertisement

Advertisement