• Jul 25 2025

ஷுட்டிங் ஸ்பாட்டில் மோசமான வார்த்தைகளால் திட்டிய தயாரிப்பாளர்- கதறி அழுத அஜித்- செம கடுப்பில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் 'வாரிசு' படத்துடன் மோதவுள்ளதால், இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்டு, யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 

இதனை அஜித் இடம்பெறும் அசத்தலான போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர்.வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள். இதில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், ஜி.எம்.சுந்தர் மற்றும் அஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இப்படம் வரும் ஜனவரி 11ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.இந்த நிலையில் அஜித்தின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்த ஒரு விஷயம் குறித்து ஒரு பிரபலம் பேசியுள்ளார்.அஜித் ஆரம்பக்காலத்தில் இந்த உயரத்தை தொட பல அவமானங்களை சந்தித்து வந்தார். 

அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு அஜித்தை சந்திக்க காஜ மொய்தீன் அவர்கள் ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை செம்ம திட்டு திட்டிக்கொண்டு இருந்தாராம். அஜித் அங்கையே கதறி அழுததாக காஜா மொய்தீன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement