• Jul 25 2025

இதுவரை 3 முறை இறந்திருக்கிறேன் - பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீத்தை நினைவிருக்கா?- அவரே கொடுத்த பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் ஞாயிறு கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த ஒரு நிகழ்ச்சி தான் லலிதாவின் பாட்டுக்கு பாட்டு. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து மக்கள் மனதை கவர்ந்தவர் பி.எச். அப்துல் ஹமீத்.

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் வறுமையில் வாடும் குடும்பத்தில் பிறந்து தனது திறமைகள் மூலம் வளர்ச்சி பெற்றுள்ளார். இவரது குரலுக்காகவே இந்த நிகழ்ச்சியை பலரும் கேட்டு வந்தனர். 


மேலும் நீண்ட வருடங்களாக இவர் சின்னத்திரையிலோ வெள்ளித்தியைிலோ வராததால் இறந்து விட்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் ஊடாக பரவி வந்தது.

இதனால் அண்மையில் பேட்டி ஒன்று அளித்தார். அதில் அப்துல் கூறியதாவது, எங்களது வானொலியில் பணியாற்றும் ஒரு சகோதரியின் கணவர் இறந்துள்ளார், அவரது பெயரும் ஹமீத். அவரது இறப்பு வானொலியில் பரவ எனது மனைவிக்கு வருத்தம் தெரிவிக்கும் அழைப்பு வந்தது.

ஆனால் இறந்தது வேறொருவர், பெயர் ஒன்றாக இருந்ததால் இந்த குழப்பம் வந்துள்ளது. மொத்தமாக நான் இதுவரை 3 முறை இறந்திருக்கிறேன் என அந்த பேட்டியில் பேசியுள்ளார்.


Advertisement

Advertisement