• Jul 24 2025

தெருவோரத்தில் படுத்துறங்கும் அஜித்... பிறந்தநாளில் வெளிவந்த புகைப்படம்... ஷாக்கில் 'தல' ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் இன்று தன்னுடைய 52 ஆவது வயதை கடந்துள்ளார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் உட்படப் பலரும் தமது வாழ்த்துக்களை மலை போல் குவித்து வருகின்றனர்.

தல ரசிகர்களை சந்தோசப்படுத்தும் வகையில் AK 62 படம் குறித்த டைட்டிலும் வெளியாகி இருக்கின்றது. ஆனால் அஜித் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் தற்போது நேபாள் பகுதியில் பைக்கில் சுற்றுலா சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. 


இந்நிலையில் தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி தல ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது. அதாவது நேபாளத்தில் பைக்கில் சுற்றுலா சென்றுள்ள அஜித் அங்கு ஒரு ரோட்டில் ஓரமாக படுத்து உறங்கியுள்ளார். 


தமிழ் சினிமாவின் ஒரு உச்ச நட்சத்திரமான அஜித் இவ்வளவு எளிமையாக இருப்பது பார்ப்போரை வெகுவாக ஈர்த்துள்ளது. மேலும் அவரின் பிறந்தநாளை உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் அஜித் இவ்வாறு எளிமையாக இருப்பதை ரசிகர்கள் பாராட்டி பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement