• Jul 25 2025

பாகிஸ்தான் சென்ற ராஜமெளலி... ஆனா அதற்கு மட்டும் ''நோ பர்மிஷன்''... நடந்தது என்ன தெரியுமா..?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமெளலி தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் பிஸியாக உள்ளார். டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜமெளலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில், ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கும் இடையேயான டிவிட்டர் கலந்துரையாடல் ட்ரெண்டாகி வருகிறது. 

அவர் தனது டிவிட்டரில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும், வரலாற்றை உயிர்ப்பிக்கும், நம் கற்பனையைத் தூண்டும் அற்புதமான எடுத்துக்காட்டுகள் இவை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த பழங்கால நாகரிகத்தைப் பற்றி இயக்குநர் ராஜமெளலி படம் எடுத்தால், அது உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவிட்டர் பதிவுக்கு, இயக்குநர் ராஜமெளலியும் பதிலளித்துள்ளார். இதுபற்றி டிவீட் செய்துள்ள ராஜமெளலி, மகதீரா படத்தின் ஷூட்டிங்கிற்காக தோலாவிரா சென்றிருந்த போது பழமையான மரம் ஒன்றைப் பார்த்தேன். அது சிதைந்துபோய் இருந்தது, சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் அந்த மரத்தின் மூலம் விவரிக்கும்படி ஒரு படம் இயக்கலாம் எனத் தோன்றியது.அதன்பின்னர் ஒருமுறை பாகிஸ்தான் சென்றிருந்தபோது மொஹஞ்சதாரோவை பார்வையிட வேண்டும் என மிகவும் முயற்சி செய்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என அழுகை எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். 2018ம் ஆண்டு பாகிஸ்தானின் காராச்சி நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராஜமெளலி கலந்துகொண்டார்.

அப்போது அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்த்த அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாகிஸ்தானின் மொஹஞ்சதாரோவை பார்க்க ராஜமெளலிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், SS ராஜமெளலி என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்ட் செய்து, இதுகுறித்து விவாதம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







Advertisement

Advertisement