• Jul 24 2025

திருமண பார்ட்டியில் தவறுதலாக இழுக்கப்பட்ட அஜித் பட நடிகையின் சேலை- பதறிப்போய் காப்பாற்றிய கணவர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பெங்காலி திரைப்படமான பாலோ தேகோவில் என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபல்யமானவர் தான் வித்யா பாலன்,இவர் அவரது முதல் இந்தி திரைப்படமான பரினீதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து லகே ரஹோ முன்னா பாய் மற்றும் பூல் புலையா ஆகிய திரைப்படங்கள் அவருடைய நடிப்பில் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.

வித்யா பாலன் தொடர்ந்து பா , இஷ்கியா , நோ ஒன் கில்ட் ஜெசிகா, கஹானி மற்றும் சில்க் ஸ்மிதாவின்  வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தி டர்ட்டி பிக்சர் ஆகியவற்றில் நடித்து புகழ்பெற்றார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வித்யா பாலனுக்கு கிடைத்தது.


வித்யா பாலன், , தமிழில் நடிகர் அஜித்குமாருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை படத்திலும் , சகுந்தலா தேவி , ஷெர்னி, மற்றும் ஜல்சா  ஆகிய படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்களும் வித்யா பாலனுக்கு ஹிட்டாக அமைந்தன.

2012 ஆம் ஆண்டு வித்யா திரைப்பட தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை மணந்தார். மேலும் 2014-ல் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஶ்ரீ விருதை வித்யாபாலன் பெற்றார்.


இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் குனித் மோங்காவின் திருமணம் நேற்று நடைபெற்றது. இதற்கான திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியில் வித்யாபாலன் அவருடைய கணவர் சித்தார்த் ராய் கபூருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் வித்யா பாலன் கணவருடன் நடந்து வரும் போது அவருடைய சேலை முந்தானை சிக்கி நழுவுகிறது. இந்த சங்கடமான சூழலில் உடனே பதட்டமான வித்யா பாலன் முந்தானையை சில வினாடிகளில் சரி செய்துவிட்டார். இது தொடர்பான வீடியோ & புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.


Advertisement

Advertisement