• Jul 25 2025

பத்து வாரங்களாகியும் இதுவரை நாமினேஷனுக்கு வராத ஒரே ஒரு போட்டியாளர் யார் தெரியுமா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேறியிருந்தனர். இந்த நிலையில் இவர்களை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.

அதன்படி இந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்றிருப்பது ஏடிகே மற்றும் மணிகண்டன் என்று கூறப்படுகின்றது. இவர்களில் யாரே ஒருவர் தான் வெளிறுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறும் போட்டியாளர்கள் பெரும் ஓட்டுகளில் அடிப்படையில் இந்த எலிமினேஷன் நடந்து வருகிறது. ஆனால் இதுவரை இந்த நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத ஒரே ஒரு போட்டியாளரும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகிறார்.

அவர் வேறு யாருமில்லை திருநங்கை போட்டியாளரான ஷிவின் தான். எல்லா டாஸ்க்களிலும் திறமையாக விளையாடி வரும் ஷிவின் பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நியாயமான கருத்தை தெரிவித்து வருகிறார். இதனால் இவருக்கு வெளியில் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட்டில் நிச்சயம் ஷிவின் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுவரை நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத இவர் இனி இடம் பெற்றாலும் முதலாவதாக காப்பாற்றப்படுவார் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement