• Jul 23 2025

கால்பந்து உடையில் அம்மா ஷாலினியுடன் இருக்கும் அஜித்தின் மகன்- வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததால், ஷூட்டிங் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது.

 இப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் படக்குழு மௌனம் காத்து வருகிறது.அடுத்த மாதங்களில் இப்படம் குறித்த அப்டேட்டுக்கள் வரலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


அஜித்துக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது படங்கள் ரிலீஸ் ஆனால் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

அஜித்தின் போட்டோ அல்லது அவரது குடும்ப போட்டோ எதாவது வெளியானால் சற்று நேரத்தில் அதை ரசிகர்கள் பெரிய அளவில் வைரல் ஆக்கிவிடுகிறார்கள்.தற்போது அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து உடையில் அம்மா ஷாலினி உடன் இருக்கும் போட்டோ வைரலாகி இருக்கிறது.


சென்னை FC அணியின் டுவிட்டர் கணக்கில் இந்த பதிவை வெளியிட்டு இருக்கின்றனர். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement