• Jul 23 2025

நான் சொன்னது ஒரு கோ இன்சிடென்ட் தான் சண்டை போட்டு தான் கிடைச்சிச்சு - KPY சீசன் 4-ல் மனம் திறந்த விக்ரமன்! வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசீம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.இறுதியில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற விக்ரமன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


இந்நிலையில் ’கலக்கப்போவது யாரு சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சியில் விக்ரமன், அமுதவாணன், ஷிவின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது விக்ரமனிடம், மதுரை முத்து ஒரு கேள்வி எழுப்பினார். அதில் "பிக்பாஸ்ல அவர் உள்ளே தமிழ்நாடு விஷயம் பேசிட்டு இருந்தார்.  வெளியேவும் அந்த விஷயம் நடந்துட்டு இருந்தது, இதை எப்படி நீங்கள் பீல் பண்றீங்க?" என கேட்டார். 

இதற்கு பதில் அளித்த விக்ரமன், "அதை சொன்ன போது  எனக்கு வியப்பா இருந்தது. எதேச்சையாக நடந்தது போல இருந்தது.  ஏன்னா பொங்கல் அன்னைக்கு நாம மறந்துட்ற ஒரு விஷயம் என்னன்னா தமிழ்நாடுனு நம்ம மாநிலத்துக்கு பெயர் வந்த நாள் அதான். பெரிய போராட்டத்திற்கு பிறகு அது நடந்தது.


தியாகி சங்கரலிங்கனார் என்றொரு மிகப்பெரிய தமிழறிஞர் 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அவர் இறந்தே போயிட்டார்.  அடுத்து 1968-ல் மிகப்பெரிய போராட்டம். நாடாளுமன்றம்ல  போய் சண்டை போட்டு நம்ம பேரை மாத்துனோம்.  தமிழ்நாடுனு பேரை வச்சோம். அது முக்கியமான நாள்.   அதற்காக தியாகம் செய்த தலைவர்களுக்கு புகழ் வணக்கம் செய்யுற மாதிரி நாம பண்ண வேண்டியது இருக்கு. அதனால் அதை  நான் சொன்னேன். ஆனால் அந்த தருணத்தில் வெளியே இந்த சம்பவம் போயிட்டு இருக்கு என்று எனக்கு தெரியாது". என விக்ரமன் பதில் அளித்தார்.



Advertisement

Advertisement