• Jul 25 2025

அனுமதியின்றி எடுக்கப்பட்ட புகைப்படங்களால் கடுப்பான ஆலியா பட் - போலீஸை டேக் செய்து பதிவிட்ட வைரல் பதிவு!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார்.ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி  ஆலியா பட்டுக்கு, பெண் குழந்தை  பிறந்தது.

குழந்தைக்கு ஆலியா பட்- ரன்பீர் கபூர் இணைத்து ராஹா என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை ராஹாவை போட்டோ எடுக்காமல் இருக்க, தம்பதியர் ரன்பீர் கபூர் - ஆலியா பட் இருவரும் ஊடகத்தினரை சந்தித்தனர்.  அப்போது தங்களது மகள் ராஹாவை புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என  கேட்டுக் கொண்டனர்.

இச்சூழலில் நடிகை ஆலியா பட் வீட்டில் இருந்த போது அவரது அனுமதியின்றி 2 நபர்கள் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து, தன்னை புகைப்படம் எடுத்ததாக நடிகை ஆலியா பட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை போலீஸை டேக் செய்து ஆலியா பட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நீங்கள் எல்லாம் என்னிடம் விளையாடுகிறீர்களா?மதிய நேரத்தில் நான் என் வீட்டில்   அமர்ந்திருந்தேன். யாரோ என்னை நீண்ட நேரமாக பார்ப்பதாக உணர்ந்தேன். 

வீட்டிற்கு வெளியே நான் சுற்றி பார்த்த போது பக்கத்து வீட்டின் மாடியில் கேமராவுடன் இரண்டு நபர்கள் இருந்தார்கள்.இவ்வுலகில் இதெல்லாம் சரி என எதெல்லாம் அனுமதிக்கப்படுகிறது என எனக்கு தெரியவில்லை. 

இது ஒருவரின் பிரைவசி மீதான தாக்குதல் ஆகும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட்  உள்ளது. அந்த லிமிட் இன்று சிலரால் பாதுகாப்பாக கடக்கப்பட்டு விட்டது” என ஆலியா பட் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement