• Jul 25 2025

குடும்பத்துடன் பந்தியில் அமர்ந்து சாப்பிடும் சூப்பர் ஸ்டார் .! செம வைரலாகும் வீடியோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கயாவது சென்றாலோ அல்லது ஏதேனும் விழாக்களுக்கு வந்தாலோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி விடும். 

அந்தவகையில் தற்போது ரஜினி தனது மனைவி மற்றும் தனது மகள் ஆகியோருடன் குடும்பத்துடன் பந்தியில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் ரஜினிகாந்த் மகா சிவராத்திரி மற்றும் பிப்ரவரி 19 அன்று தனது மூத்த சகோதரரின் 80 வது பிறந்தநாளைக் கொண்டாட பெங்களூருக்கு வருகை தந்திருந்தார்.

அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தான் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அவர் உணவு சாப்பிடும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த பலரும் “தலைவர் சாப்பிடுவதை இப்போ தான் முதல் தடவை பார்க்கிறேன்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


Advertisement

Advertisement