• Jul 24 2025

ஆசை மகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆலியா பட்-ரன்பீர் கபூர் தம்பதி- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் ரன்பீர்  மற்றும் ஆலியா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். 


திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் கெரியரில் கவனம் செலுத்தி வந்த நிலையில் ஆலியா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.இந்த நிலையில் இவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளதக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.


 இதனால் திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.மேலும்  குழந்தை பிறந்ததை அடுத்து ரன்வீர் எங்களது வாழ்க்கையின் முக்கியமான செய்தி இதுதான்.ங்களது குழந்தை கைகளில். அழகான பெண் குழந்தை அவள். ஆசிர்வதிக்கப்பட்ட அன்பான பெற்றோராக மாறி இருக்கிறோம் எனக்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து தமது பிள்ளையை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அப்பா ரன்பீர் கபூர் தனது கைகளில் பிறந்த குழந்தையைப் பிடித்தபடி காணப்பட்டார்.இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.






Advertisement

Advertisement