• Jul 25 2025

லவ் ப்ரொபோசல்ஸ் எல்லாம் இப்படித்தான் இருக்கும்- சமந்தாவின் காதல் ரகசியம் குறித்து கூறிய கவின்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இவர்களுடன்   K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கவின் பிரபல சேனலின் கவின் Fans Festival என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.மீம்ங்களை பகிர்ந்து அந்த மீமில் இருந்து கேள்விகள் கவினிடம் கேட்கப்பட்டது. 


குறிப்பாக கவினுக்கு இருக்கும் பெண் ரசிகைகள் குறித்து, "பெண் ரசிகைகளை எப்படி சமாளிக்கிறீர்கள். சிலர் Love Proposal செய்வாங்களே.." என நெறியாளர் கேட்ட கேள்விக்கு, "இது மாதிரி மாயையில் இருந்து வெளியே வாங்க. நிஜ வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்காது. நான் விஜய் டிவியில் இருக்கும் போது நடிகை சமந்தாவை ஒன் அண்ட் ஒன்லி இண்டர்வியூ எடுத்தேன்.


அப்போ நானும் அவங்ககிட்ட இதே மாதிரி தான் கேள்வி கேட்டேன். "எப்படி மேம் ப்ரொபோசல்ஸ் எல்லாம்?".. அதற்கு அவங்க சொன்னது, "ஒன்னுமே கிடையாது. வரவே வராது. நம்ம பாட்டுக்க நம்ம வேலைய பார்த்துட்டு இருப்போம்" என சமந்தா சொன்னாங்க" என கவின் பதில் அளித்துள்ளார்.


Advertisement

Advertisement