• Jul 25 2025

நம்ம பிக்பாஸ் பிரபலம் ADKவா இது?... ஆளே அடையாளம் தெரியலயே? - ஷாக்கான ரசிகர்கள்

ADK
Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்குபெற இடையில் டபுள் எவிக்ஷன் எல்லாம் நடந்து கடைசியில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.ஆனால் இந்த முறை பிக்பாஸ் வெற்றியாளர் தேர்வில் தமிழக மக்களுக்கு சுத்தமாக விருப்பமே இல்லை, எப்படி ஜெயிக்கலாம் என்று தான் இப்போதும் மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பிக்பாஸ் அடுத்த சீசனிலாவது போட்டியாளர்கள் மிகவும் பெஸ்ட்டாக வர வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு உண்டு.

தமிழ் சினிமாவில் கடல் படத்தில் இடம்பெற்ற மகுடி மகுடி என்ற ராப் பாடல் மூலம் அறிமுகமான இலங்கை பிரபலம் ADK. அதன்பிறகு ஏராளமான ராப் பாடல்கள் பாடி பிரபலமாக இருந்தாலும் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்து நிறைய பதிவுகள் போட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் 2005ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் இந்த வருடத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவரா அது என கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement