• Jul 25 2025

திடீரென வெளிநாட்டுக்குப் பறக்க இருக்கும் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா- அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் புஷ்பா.அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.


இந்நிலையில் இந்த படம், ரஷ்ய மொழியில் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அல்லு அர்ஜூன் & ராஷ்மிகா மந்தனா ரஷ்யா செல்கின்றனர். மேலும் இந்த படத்தின் சிறப்புக் காட்சிகள் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி மாஸ்கோ நகரிலும், டிசம்பர் 3 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலும் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது.இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement