• Jul 25 2025

அப்படியெல்லாம் யாரையும் சொல்லக் கூடாது- பிக்பாஸிற்கே கட்டளை போட்ட விக்ரமன்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஆரம்பித்து 50 நாட்களுக்கு மேலாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

அதன்படி இந்த வாரம் பிக்பாஸ் பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் எனும் டாஸ்க் போட்டியாளர்களுக்கு தரப்பட்டுள்ளது. இதனை போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர்.


இந்த டாஸ்கில் ஒரு தரப்பினரை அடிமை என குறிப்பிட்டு இருக்கின்றனர்.அது தவறு என விக்ரமன் பிக் பாஸ் டீமிடம் வலியுறுத்தி இருக்கிறார்.அதற்கு பிறகு தான் சேவகன் என அந்த வார்த்தை மாற்றப்பட்டு இருக்கிறது. விக்ரமனின் செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

மேலும் இந்த டாஸ்க்கிலும் அசீம் ஜனனியுடன் கத்தி சண்டை போடுகின்றார்.அதே போல தனது டீமுடன் சேர்ந்து விளையாடாமல் தனித்து விளையாடி வருவதையும் காணலாம்.

Advertisement

Advertisement