• Jul 24 2025

தமது ஆசைமகளுக்கு குடும்ப வழக்கப்படி பெயர் வைத்த ஆல்யா பட்- இதற்கு இவ்வளவு அர்த்தமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் ஆலியா பட் மற்றும் ரன்பீர். இவர்கள் இந்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.அத்தோடு கடந்த நவம்பர் 6ம் திகதி அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

தங்கள் பெண் குழந்தையுடன் ரன்பீர் - ஆலியா வீடு திரும்பியபோது, எடுக்கப்பட்ட படங்களும் செய்திகளும் பாலிவுட் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன. இந்நிலையில் தற்போது தனது குழந்தைக்கு ராஹா எனப் பெயரிட்டுள்ளதாக ஆலியா பட் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.


இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள ஆலியா, "ராஹா (அவளது புத்திசாலி மற்றும் அற்புதமான பாட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்) என்ற பெயருக்கு பல அழகான அர்த்தங்கள் உள்ளன... ராஹா, தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள். சுவாஹிலி மொழியில் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்தில், ராஹா ஒரு குலம், பெங்காலியில் - ஓய்வு , ஆறுதல், நிவாரணம். அரபு மொழியில் அமைதி. மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் இந்த பெயர் பொருள்படும். அவளுடைய பெயருக்கு உண்மையான அர்த்தத்தை, நாங்கள் அவளை பெற்ற முதல் நொடியிலிருந்து உணர்ந்தோம்! எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு நன்றி ராஹா. நம் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரஹாவின் பாட்டி நீது கபூர் தான் அவளது பெயரை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ராஹாவுக்கு ஒரு கால்பந்து ஜெர்சியை தயார் செய்து, அதில் அவளது பெயரை பிரிண்ட் செய்து, அந்தப் படத்தை ஆலியா இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். தவிர அவளது தந்தை ரன்பீர், மிகப்பெரிய கால்பந்து ரசிகர். ராஜ் கபூர், ரந்தீர் கபூர், ரிஷி கபூர், ரன்பீர் கபூர் மற்றும் அவரது சகோதரி ரித்திமா கபூர் சஹானி என கபூர் குடும்பத்தில் 'ஆர்' என்று தொடங்கும் பெயர்களை வைக்கும் மரபு உள்ளது. அதானால் ஆலியா - ரன்பீர் மகளுக்கு ராஹா எனப் பெயர் வைத்ததில் ஆச்சரியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement