• Jul 24 2025

காயத்துக்கு மீண்டும் சிகிச்சை எடுக்கும் பூஜா ஹெக்டே- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தினைத் தொடர்ந்து இவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வந்தால் அங்கே நடித்து வந்தார்.

அந்த வகையில் தமிழில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அறிமுகமாகியிருந்தார்.இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததல் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிப்பதிலேயெ ஆர்வம் காட்டி வருகின்றார்.


சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே, ஒரு மாதம் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காலில் காயத்துடன் கட்டுபோட்ட புகைப்படத்தை பூஜா ஹெக்டே வெளியிட்டு இருந்தார். அதில் இடது காலில் தசை நார் கிழிந்து விட்டது என குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, வாளி நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி தசை நார் கிழிந்த இடது காலை உள் வைத்து சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் உதவியாளர் உதவியுடன் நடைபயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement