• Jul 26 2025

இரண்டு மாதத்தில் உடல் எடையைக் குறைத்த ஆல்யா- சஞ்சீவ் என்ன பண்ணினார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ஆல்யா மானசா. ஆனால் இவர் இதற்கு முதலே கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையை வெளிப்படுத்தியவர்.

இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தது ராஜா ராணி சீரியல் தான். அத்தோடு இந்த சீரியலில் தனனோடு ஒன்றாக நடித்த நடிகர் சஞ்சீவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு ஆல்யா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.


இருப்பினும் பெற்றோரை எதிர்த்து சஞ்சீவைத் திருமணம் செய்த இவருக்கு ஐலா மற்றும் ஆர்ஸ் என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.அண்மையில் தான் இரண்டாவது மகன் பிறந்தார், குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆல்யா மானசாவின் உடல் எடையும் அதிகரித்தது.

தற்போது புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஆல்யா 2 மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளாராம். மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்துள்ள ஆல்யாவிற்கு அவரது கணவர் சஞ்சீவ் சூப்பரான பரிசும் அளித்துள்ளார்.இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement