• Jul 24 2025

ஆல்யா மானசா காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது இப்படித்தானா.? ஆதாரத்துடன் வெளியான வீடியோ.. வருந்தும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு சில சீரியல்கள் எப்படி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றனவோ அதேபோல் அந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் எளிதில் ரசிகர்களால் மறந்து விட முடியாது. அவ்வாறான ஒரு பிரபலம் தான் ஆல்யா மானசா. 


அந்த வகையில் இவர் 'ராஜா ராணி' என்ற சீரியலின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இந்த சீரியலானது அவருக்கு நல்ல போரையும், புகழையும் ஏற்படுத்தித் தந்தன.


இதனைத் தொடர்ந்து நிறைய தனியார் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு சிறப்பித்து வந்தார். அதுமட்டுமல்லாது அவரின் வாழ்க்கை துணையை திருமணம் செய்யவும் இந்த சீரியல் தான் ஒரு காரணமாக இருந்தது.


அவ்வாறு சஞ்சீவை திருமணம் செய்த ஆல்யா மானசாவிற்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் இணைந்து 'இனியா' என்ற புதிய தொடரில் நடித்து வருகின்றார். 


இந்நிலையில் தான் சமீபத்தில் ஆல்யா மானசாவிற்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்மையில் அவருக்கு சிறிய சர்ஜரியும் நடந்தது. இந்த எலும்பு முறிவு அவருக்கு கபடி விளையாடும் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement