• Jul 23 2025

அஜித்தின் முக்கிய படத்தின் சாதனையை முறியடித்த துணிவு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சாதனையாளராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். அந்தவகையில் இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அதுமட்டுமல்லாது அந்தப் படங்கள் படைத்த சாதனைகளும் அதிகம் தான். இவரின் நடிப்புத் திறமையை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். 


அந்தளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். அஜித்தின் எந்தப் படம் வந்தாலும் அதனை ரசிகர்கள் வெற்றிப் படம் போல் கொண்டாடுவது வழமை. அவ்வாறு கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த ஒரு திரைப்படம் தான் 'விஸ்வாசம்'. இப்படமானது பாக்ஸ் ஆபிஸில் ரூ. 187 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.


இதேபோன்று சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் 'துணிவு'. இப்படமும் வெளியான முதல் நாளில் இருந்து மாபெரும் அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 100 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் தான் தற்போது புதுக்கோட்டையில் துணிவு படம் புதிய சாதனை படைத்துள்ளது. அது என்னவெனில் புதுக்கோட்டையில் உள்ள பிரபல திரையரங்கங்களில் அதிகமாக ரசிகர்கள் வந்த பார்த்த திரைப்படங்களில், பொன்னியின் செல்வன், விக்ரம் போன்றவற்றிற்கு அடுப்படியாக விஸ்வாசம் இருந்தது.

ஆனால் தற்போது விஸ்வாசத்தின் இடத்தை துணிவு திரைப்படம் எட்டிப் பிடித்துள்ளது. அதாவது விஸ்வாசத்தை விட அதிகளவான ரசிகர்கள் துணிவு படத்தை பார்த்துள்ளனர். இதனால் விஸ்வாசத்தின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement