• Jul 24 2025

அமுதவாணன் முரடன் ரொம்ப முரட்டுத்தனமாக இருப்பவர்- அசீம் உண்மையை பேசுறாரு மணிகண்டனின் தாயார் சொன்ன அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஹவுஸ்மேட்ஸின்  பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தவாறு உள்ளனர். இதற்கு முதல் நடந்த வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

அப்படி ஒரு சூழலில்,பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்து மணிகண்டனின் தாயார் பேசிய விஷயம், அதிக கவனம் பெற்று வருகிறது.

போட்டியாளர்கள் குறித்து பேசும் மணிகண்டனின் தாயார், "விக்ரமனை ரொம்ப புடிக்கும். பேச்சு நல்லா இருக்கும். அது நியாயமா இருக்கு.

 சில இடத்துல கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும். அவ்ளோ தான். வேற ஒண்ணுமில்ல. அதே போல அசீம் நல்லா உண்மையை பேசுறீங்க. ரச்சிதா ரொம்ப ஸ்வீட். அவங்க இன்னும் நல்லா விளையாடணும்" என ரச்சிதாவிடம் அறிவுறுத்துகிறார்.


இதன் பின்னர், அமுதவாணன் பற்றி பேசும் மணிகண்டனின்  தாயார், "முரடன். முரட்டுத் தனமாக இருப்பவர்" என்றும் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டதும் அமுது உட்பட அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். இதே போல, ஏடிகே சாமியார் வேஷம் போட்டதையும் கதிரவன் சைக்கிள் ஜாக்ஸன் வேஷம் போட்டு நடனமாடி இருந்ததையும் பாராட்டிய அவர், ஷிவின் நல்ல பொண்ணு என்றும் கூறி இருந்தார்.



Advertisement

Advertisement