• Jul 25 2025

நீங்கள் என்ன இயேசு நாதரா?- அஸ்வினின் செம்பி படத்தால் புதிய சிக்கலில் சிக்கிய பிரபல இயக்குநர்- எஸ்கேப் ஆகி ஓடிய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள  திரைப்படம் செம்பி. இப்படத்தில் கதாநாகனாக அஸ்வின் நடித்துள்ளதோடு நடிகை கோவை சரளாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இதனால் படத்தின் ப்ரமோஷன் நடந்து வந்தது. அந்த வகையில் அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்  பிரபு சாலமனை பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.


இந்த படத்தில் நடிகை கோவை சரளா, கதையின் நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். காட்டில் வாழும் மக்களுக்கு அரசியல்வாதிகளால் எப்படி அநீதி இழைக்கப்படுகிறது? என்பதை தோலுரிக்கும் விதமாகவும், தன்னுடைய இடம் சூறையாட படுவதால் கோவை சரளா அரசியல் வாதிகளை எப்படி வழிவாங்குகிறார் என்பதை விறுவிறுப்பாகவும், பரபரப்பான காட்சிகளுடனும் இயக்கியுள்ளார் பிரபு சாலமன்.

குறிப்பாக இந்த படத்தில், அம்மா - அப்பாவை இழந்த பேத்தியுடன் வாழும் பாட்டியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே பாட்டி மற்றும் பேத்தி இடையில் உண்டான பாச பிணைப்பு ஆழமாக கட்டப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்துள்ளார்.

 இப்படத்தில் முன்னோட்ட காட்சி செய்தியாளர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.  இதனை பார்த்து செய்தியாளர்கள் படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும், இப்படம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ பிரச்சாரம் போல் உள்ளது என இயக்குநர் பிரபு சாலமனிடம் வாதிட்டுள்ளனர்.


ஃபிலிம் by ஏசு என பிரபு சாலமன் போட்டுள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழி வகுத்துள்ளது. இதனை பார்த்து செய்தியாளர்கள் பலர்  பொங்கி எழுந்து, படத்தை இயக்கியது நீங்கள் தானே? அப்போ பிரபு சாலமன் என்று போடாமல் இயேசு என போட்டுள்ளீர்கள்...  நீங்கள் என்ன இயேசு நாதரா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

என்ன பதில் சொல்வது என மேடையில் விழி பிதுங்கி நின்ற பிரபு சாலமன், தான் சிறுவயதில் இருந்து கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வளர்ந்தேன்... என்னை பொருத்தவரை கிறிஸ்தவம் என்பது மதமே இல்லை என சொல்லி மழுப்பலாக பதில் அளித்தும், செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி எழுப்பியதால் என்ன சொல்வது என்று தெரியாமல் நன்றி என கூறி அந்த இடத்தில் எஸ்கேப் ஆனார். இதுகுறித்த விடியோக்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement