• Jul 25 2025

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அசீமை கிண்டலடித்து வம்புக்கு இழுத்த அமுதவாணன்-என்ன வில்லத்தனம்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது களைகட்டி வருகிறது. கடந்த 5 சீசன்களை போலவே ரசிகர்களை கவர்ந்து வருகிறது இந்த நிகழ்ச்சி.

21 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த நிகழ்ச்சி நித்தம் ஒரு டாஸ்க்குகள், அடிதடி சண்டைகள் என பல்வேறு நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றது. மேலும் ஒவ்வொரு போட்டியாளர்களாக வெளியேறி தற்பொழுது 13 போட்டியாளர்கள் மாத்திரமே உள்ளனர்.


இதில் அசீம், விக்ரமன், ஆயிஷா, தனலட்சுமி என ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அசீமை, அமுதவாணன் வம்பிழுக்கும் வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. விழித்திருக்கும்போது அனைவரையும் வம்பிழுக்கும் அசீம், ஆழ்ந்த உறக்கத்தில் அவரையறியாமல் செய்யும் செய்கைகளை அமுதவாணன் அப்படியே செய்துக் காட்டி வம்பிழுக்கிறார். அவரது இந்த வில்லத்தனம் ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது.

இன்றைய தினம் 58வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நுழைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு விக்ரமன் மற்றும் ரச்சிதா இருவரும் நிகழ்ச்சி முடிய இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என்பது குறித்து விரல்விட்டு எண்ணிய செயல் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அவர்களுக்கு நிகழ்ச்சி சலிப்பை ஏற்படுத்தியுள்ளதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement