• Jul 24 2025

அசீம் மற்றும் விக்ரமனைப் பார்த்து பொறாமைப்பட்ட அமுதவாணன்- அவங்க நல்லா இருந்தாலும் இவர் விடமாட்டார் போல இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி வருவார்கள் என்று நம்பப்படுகின்றது.

போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். அந்த வகையில் Ticket To Finale டாஸ்க்கில் மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில், விக்ரமன் மற்றும் அசீம் குறித்து அமுதவாணன் சொன்ன விஷயம், அதிகம் வைரலாகி வருகிறது.


பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் நிறைய முறை வாக்குவாதங்களில் ஈடுபட்டதை நாம் பார்த்திருப்போம். அப்படி ஒரு சூழலில், தற்போது நடந்து முடிந்த மிதிவண்டி டாஸ்க்கில் இருவரும் ஒரே சைக்கிளில் அமர்ந்து டாஸ்க்கை தொடங்கி இருந்தனர்.

 முன்னதாக, அசீம் இருக்கும் சைக்கிளில் யார் இருக்க போகிறீர்கள் என கேட்ட போது தான் இருப்பதாக விக்ரமன் குறிப்பிட்டு ஒன்றாக சைக்கிளில் இருக்கும் முடிவை எடுத்திருந்தார்.அப்படி ஒரு சூழலில், டாஸ்க்கின் போது விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவரும் ஒரே சைக்கிளில் ஜாலியாக டாஸ்க் ஆடி வந்தனர்.


அந்த சமயத்தில், அருகே உள்ள சைக்கிளில் இருக்கும் அமுதவாணன், "விக்ரமன், அசீம் ஒவ்வொரு தடவையும் அடிச்சுக்கிட்டாங்க. ஆனா, இன்னைக்கி  ஒற்றுமையா சைக்கிள்ல போறாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அடிச்சுப்பாங்களா?. இல்ல இப்படியே ஒற்றுமையா போவாங்களா?" என கமெண்ட் செய்கிறார்.இதனைக் கேட்டதும், "நாங்க நல்லா இருந்தாலும் நீங்க நல்லா இருக்க விடமாட்டீங்க போலயே" என சிரித்துக் கொண்டே  அசீம் தெரிவிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement