• Jul 24 2025

காப்பி சர்ச்சையில் சிக்கிய வாரிசு ... விஜய்யை வெளுத்து வாங்கும் ரஜினி ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்யின் வாரிசு பட டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனம் ரஜினி படத்தில் இருந்து காப்பி அடிக்க பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, இது எங்க டயலாக் மாமே என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

வாரிசு படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. வெளியானது முதல் யூடியூப்பில் வியூஸ்களை அள்ளிக்குவித்து வரும் இந்த டிரைலர் பல்வேறு ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.அத்தோடு இது மெகா சீரியல் போல உள்ளது என்றும் சுந்தர் சி இயக்கிய வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் 2-ம் பாகம் எனவும் எக்கச்சக்கமான ட்ரோல்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்துள்ளன.

மேலும் இது போதாது என்று தற்போது காப்பி சர்ச்சையிலும் சிக்கி உள்ளது இந்த டிரைலர். இதில் விஜய் பேசும் வசனங்கள் பல இடம்பெற்று இருந்தன. அதில் பிரகாஷ் ராஜிடம், ‘மாமே அன்போ அடியோ எனக்கு கொடுக்கும்போது யோசிச்சு கொடுக்கனும், ஏன்னா நீ எதை கொடுத்தாலும் அதை நான் டிரிபிளா திருப்பி கொடுப்பேன் என பேசி இருப்பார்’. இந்த வசனம் தான் காப்பி என்று கூறப்படுகிறது.

இதேபோல வாரிசு டிரைலரில் இடம்பெற்றுள்ள ஒரு வசனத்தை ரஜினி ஏற்கனவே ஒரு படத்தில் பேசி உள்ளார் என்பதை சூட்டிக்காட்டி, இது எங்க டயலாக் மாமே என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என வாரிசு பட விழாவில் பிரபலங்கள் பலர் பேசி இருந்தனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள், விஜய்யை தாக்கி பதிவிட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் வசம் வாரிசு டிரைலரும் தொக்காக மாட்டியுள்ளது.

வாரிசு திரைப்படத்தை வம்சி இயக்கி உள்ளார். தில் ராஜு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் வருகிற ஜனவரி 11-ந் தேதி பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. அத்தோடு இப்படத்திற்கு போட்டியாக அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் அதே நாளில் ரிலீசாக உள்ளதால், இருவரும் 9 ஆண்டுகளுக்கு பின் நேருக்கு நேர் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement