• Jul 25 2025

அமுல்பேபி மீனாவா இது... நான் ஆடிப் போய்ட்டேன்... மேடையில் ரஜினி பகிர்ந்த சுவாரஷ்ய சம்பவம்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை மீனா திரையில் நடிக்கத் தொடங்கி 40 ஆண்டுகளை கடந்துள்ளதைக் கொண்டாடும் வகையில் அவரது திரையுலக நண்பர்கள் 'மீனா 40' என்ற நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்து கொண்டாடி இருந்தார்கள். 


இதில் ஜீவா, ரோஜா, சரத்குமார், ராதிகா, சினேகா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாது நடிகர் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிலையில் அந்த விழாவில் அவர் ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.

அந்தவகையில் அவர் கூறுகையில் "நாங்க பார்த்த அந்த அமுல் பேபி மீனாவா இது, அப்பிடியே மாறிட்டாங்களே, எஜமான் படத்தினுடைய கதையை கேட்டிட்டு நான் ஹீரோயின் யாருன்னு கேட்டேன். அதுக்கு அவங்க மீனா பெயரை சொன்னாங்க, நான் எந்த மீனான்னு கேட்டேன், அதற்கு அவங்க அன்புள்ள ரஜினிகாந்த் இல் நடித்த மீனா தான் எனக் கூறினார்கள்.


பின்னர் மீனா நடித்த 2தெலுங்கு படங்களை காட்டினார்கள். அதில் மீனாவின் டான்ஸை பார்த்து நான் அப்படியே ஆடிப் போய்ட்டேன், காலம் எல்லாம் என்ன அற்புதமும் செய்யும் என்பதை உணர்ந்து கொண்டேன், ஷூட்டிங் முதல் நாளின் போது மீனா என் முன்னாடி வரவே மாட்டாங்க அவ்வளவு வெட்கம், ஆனால் படம் முடியிற நேரத்தில நான் பேசுறதை விட மீனா பேசினது தான் அதிகம்" என சிரிச்சுக்கிட்டே கூறி இருந்தார்.


மேலும் "எங்கேயோ கேட்ட குரல் படத்தில் மீனா எனது மகளாக நடித்திருந்தார். அதேபோன்று அன்புள்ள ரஜனிகாந்த் படத்திலும் மீனா தான் நடித்திருந்தாங்க" எனவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.   

Advertisement

Advertisement