• Jul 26 2025

நடிகர் விஜய்யால் அப்செட்டில் ரசிகர்கள்...ஓ... இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். ரஜினியை அடுத்து வசூலில் மாஸ் காட்டும் நடிகரும் இவரே.

ஆனால் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் அவ்வளவாக வசூல் வேட்டை நடத்தவில்லை.அத்தோடு  வாரிசு படம் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்ப்பார்த்தால் அதற்கு மாறாக நடந்தது.

அத்தோடு குடும்ப சென்டிமென்ட் கொண்ட படமாக இருந்தாலும் அவ்வளவாக ரசிகர்களால் கொண்டாடப்படவில்லை.

இயக்குனர் வம்சியுடன் இணைந்து வாரிசு படத்தை கொடுத்த விஜய் லியோ படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு சினிமா இயக்குநர் கோபிசந்த் மலினேனி என்பவருடன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கெனவே தெலுங்கு பட இயக்குனருடன் இணைந்து நடிக்க படம் சரியாக ஓடவில்லை, மீண்டும் ஏன் அவர்களுடன் விஜய் கூட்டணி அமைக்கிறார் என கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்களாம்.

Advertisement

Advertisement