• Jul 25 2025

ராஜ்கிரணே அதிர்ந்து போகும் அளவிற்கு கிடா விருந்து வெளுத்துக்கட்டும் நடிகர்- இத்தனை வேலை பார்த்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமல் போன்ற நடிகர்களைப் போல பிஸியாக நடித்து வந்த நடிகர் தான் ராஜ்கிரண்.மேலும் ராஜ் கிரண் என்றாலே எல்லோருக்கும் எலும்பு துண்டு தான் ஞாபகம் வரும்.

ஏனென்றால் எலும்பு கடிப்பதில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. என் ராசாவின் மனசிலே படத்திலிருந்து தொடங்கி முனி வரை பல படங்களில் கறிவிருந்து காட்சிகளில் ராஜ்கிரண் புகுந்து இப்போது ராஜ்கிரண் ஹீரோக்களின் அப்பா கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். ராஜ்கிரணையே மிஞ்சும் அளவிற்கு கறி விருந்தில் வெளுத்து வாங்கும் வில்லன் நடிகர் ஒருவர் இல்லை என்று கூறப்பட்டு வந்தது.


இந்த நிலையில் இவரைப் போல கறி விருந்தில் வெளுத்து வாங்கும் நடிகராக கொம்பன் படத்தில் துரைப்பாண்டியாக நடித்த வேலராமமூர்த்தி காணப்படுகின்றார். இவர் சசிகுமாரின் கிடாரி படத்தில் கொம்பையாவாக மிரட்டி இருந்தார். இவர் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். ராஜ்கிரண் போல் வேல ராமமூர்த்தியும் எலும்பு கடிப்பதில் கை தேர்ந்தவர். 

இவர் நாட்டுக்கோழி சாப்பிடுவதும், கிடா விருந்து சாப்பிடுவதும் படத்தில் பார்ப்பதற்கே அவ்வளவு நன்றாக இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் வேல ராமமூர்த்தி மிலிட்டரியில் வேலை பார்த்துள்ளார். அதாவது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு அதன்பின்பு அஞ்சல் நிலையத்தில் சிறிது காலம் வேலை பார்த்துள்ளார். மேலும் சிறப்பம்சம் என்னவென்றால் வேல ராமமூர்த்தி ஒரு எழுத்தாளர்.


குற்றப்பரம்பரை, பட்டத்து யானை, குருதி ஆட்டம் போன்ற நாவல்களை ராமமூர்த்தி எழுதியுள்ளார். இந்நிலையில் இவர் மிலிட்டரியில் வேலை பார்க்கும் போதும் 30 சப்பாத்தியை பிச்சு போட்டு நாட்டுக்கோழி குழம்பு உடன் வெளுத்து வாங்கி விடுவாராம். இப்போது படங்களிலும் இதே போல் விருந்தில் பட்டையை கிளப்பி வருகிறார். 

Advertisement

Advertisement