• Jul 24 2025

டைரக்டர், ஹீரோ,எல்லோருடனும் படுக்க வேண்டும் என்றால் படவாய்ப்பே வேண்டாம்- கடும் கோபத்தில் திட்டி தீர்த்த வரலட்சுமி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரைத்துறையில் முக்கியமான இடத்தை பிடித்தவர் சரத்குமார். இவரின் மகள் வரலட்சுமி இயக்குநர் விக்னேஷ சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இது தவிர நெக்கட்டிவ் ரோலிலும் அதிகமாக நடித்து வருகின்றார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.மேலும் சமீபத்தில் உடல் எடையைக் குறைத்து ரொம்ப சிலிம்மாகவும் மாறி விட்டதோடு தனது அழகையும் கூட்டியுள்ளார்.


சமீபத்தில் பேட்டி அளித்த வரலட்சுமி சரத்குமார், " சினிமா துறையில் பட வாய்ப்பு வேண்டும் என்றால் டைரக்டர், ஹீரோ, தயாரிப்பாளர் போன்றவர்களுடன் படுக்க வேண்டும் என்ற சொல்வார்கள். எனக்கு அவர்களுடன் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம்".


"நான் இரவு தூங்கும் போது நிம்மதியாக இருக்க வேண்டும். என்னுடைய முயற்சியால் மட்டும் தான் முன்னேற வேண்டும்" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 


Advertisement

Advertisement