• Jul 25 2025

ஆனந்த ராகம் சீரியல் நடிகரின் தொலைபேசி திருட்டு -படப்பிடிப்பில் கைவரிசையைக் காட்டிய பெண்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களைக் கவர்ந்த பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் சன்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ஆனந்த ராகம்.

இந்த சீரியலில் கதாநாயகனாக அழகப்பன் என்பவர் நடித்து வருகின்றார். இதன் படப்பிடிப்பு நேற்று பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நடைபெற்றது. 


அப்போது அழகப்பன் தனது விலை உயர்ந்த செல்போனை அங்கிருந்த மேஜை மீது வைத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது செல்போன் திருட்டு போய் இருந்தது.


கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஜவுளி வாங்க, வாடிக்கையாளர் போல் வந்த 2 இளம்பெண்கள், நடிகர் அழகப்பனின் செல்போனை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து நடிகரின் செல்போனை திருடிய பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement