• Jul 25 2025

ரஜினி சீரயல் நடிகை ஸ்ரேயாவா இது?- சிறுவயதில் எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என்று பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் மக்களால் பெரிதும் ரசிக்கப்படும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக சீரியல்களே காணப்படுகின்றது. இதில் ரசிகர்களைக் கவரும் விதமாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

திரையரங்கில் ஒரு படம் வெளியாகிறது என்றால் ரிலீஸிற்கு முன், பின் சில நாட்கள் கொண்டாட்டங்களோடு முடிந்துவிடும். ஆனால் சீரியல் என்பது அப்படியில்லை, ஒவ்வொரு நாளும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு விஷயம்.

எனவே தான் நடிக்க வரும் கலைஞர்கள் படங்களில் வாய்ப்பு கிடைக்க போராடுவதை விட சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.அப்படி பல மொழிகளில் இருந்து பிரபலங்கள் தமிழ் சின்னத்திரை கால் பதித்து வெற்றிகரமாக நடித்து வருகிறார்கள்.


அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடர் நடித்து தமிழ் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் ஸ்ரேயா அஞ்சான். 


அந்த தொடரில் தன்னுடன் நடித்த சித்து என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தற்போது ஸ்ரேயா ஷு தமிழில் ரஜினி என்ற தொடரில் நடித்து வருகிறார். சித்து விஜய் டிவியில் ராஜா ராணி என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த நிலையில்  ஸ்ரேயாவின் சிறுவயதுப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement