• Jul 26 2025

காட்டுக்குள் நாய்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட ஆண்ட்ரியா…. வெளியாகியது ‘நோ என்ட்ரி’ பட ட்ரெய்லர்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை மற்றும் பாடகியான ஆண்ட்ரியா நடித்துள்ள ‘நோ என்ட்ரி’ திரைப்படத்தின் திரில்லர் நிறைந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. புதுமுக இயக்குநர் அழகு கார்த்திக் இயக்கியுள்ள இந்த படம் பெண்களை மையமாகக் கொண்ட ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

நோ என்ட்ரி படத்தின் ட்ரெய்லர் முழுக்க சாகசம், தில்லர் மர்மம் நிறைந்து காணப்படுகிறது. இப்படம், நாய்கள் பற்றியும் அந்த நாய்களுக்குள் உண்டாகும் புதிய வைரஸால் வெறி நாயாக உருமாறி, அதனை கண்டறிய சென்னையில் இருந்து சிரபுஞ்சிக்கு சாலைப் பயணமாகச் சென்று காட்டில் நாய்களிடம் வசமாக சிக்கிக் கொள்ளும் ஆண்ட்ரியாவை பற்றி இப்படத்தின் ட்ரெய்லர் விவரிக்கிறது.

மேலும், அவர் காட்டில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

 இப்படம், வெறும் 45 நாட்களில் முழுவதுமாக படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரன்யா, சாக்ஷி அகர்வால், சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டெல்லி, கோகுல் மற்றும் மானஸ் ஆகியோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement