• Jul 25 2025

அடிச்சான் பாரு....இந்தியில் உருவாக இருக்கும் சூப்பர் ஹிட் அடித்த 'LOVE TODAY' செம அப்டேட் ! '

Jo / 2 years ago

Advertisement

Listen News!

'கோமாளி' படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். 

இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில்  நடித்திருந்தார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்தனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. 

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது.கடந்த நவம்பரில் தெலுங்கிலும் இந்த படம் வெளியானது.

இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தி சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Phantom Studios நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

விரைவில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக் படக்குழுவினர் விபரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement