• Jul 23 2025

அருண் விஜய்யின் குடும்பத்துடன்.. ஜாலியாக இருக்கும் அனிதா விஜயகுமார்... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் விஜயகுமார். இவர் அன்று தொடக்கம் இன்றுவரை நடிப்பிலேயே தனது கவனத்தை அதிகளவில் செலுத்தி வருகின்றார்.


மேலும் மூத்த நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என இரு மனைவிகள். அதில் மூத்த மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா, அருண் என 3 பிள்ளைகள்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் வனிதாவுடன் ஏற்பட்ட சிறு சிறு குழப்பங்கள், மற்றும் சச்சரவுகள் காரணமாக இவர்கள் யாருமே அவருடன் கதைப்பதில்லை.


விஜயகுமாரின் மகள்கள் நால்வரும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

இவ் ஐந்து பிள்ளைகளில் நால்வர் சினிமாவில் நடித்திருக்கின்றார்கள். இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் தான்.


அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை கடந்த 97 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். 


இந்நிலையில் கடந்த சில நாட்களாக அனிதா தன்னுடைய சகோதரனான அருண் விஜய்யுடனும் அவரின் குடும்பத்தினருடனும் இணைந்து சிறிய சுற்றுலாப் பயணம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement