• Jul 23 2025

லத்தி படத்தின் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை விஷால் என்ன செய்யவுள்ளார் தெரியுமா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் லத்தி.இந்த திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.லத்தி திரைப்படத்தை தணிக்கை சான்றிதழ் அனுப்பியுள்ளனர். படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் லத்தி திரைப்படத்திற்கு UA  சான்றிதழ் வழங்கியுள்ளனர்.  

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருக்கிறார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் செண்டிமெண்ட் விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.அந்த வகையில் இந்த திரைப்படமும் இணையும் என படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில் இப்படம், தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது. இதையொட்டி, படத்தை பிரபலப்படுத்தும் வகையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 அப்போது, 8 ஆயிரம் பேருக்கு மத்தியில் பேசிய விஷால், 'லத்தி' திரைப்பட டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் தலா ஒரு ரூபாயை மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக செலவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் உறுதியளித்துள்ளார்.


Advertisement

Advertisement