• Jul 25 2025

வீட்டிற்கு வர சொல்லி தவறான முறையில் தொல்லை கொடுத்த வில்லன் நடிகர்.. பகீர் தகவலைப் பகிர்ந்த அஞ்சலி நாயர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து நடிகை அஞ்சலி நாயர். மலையாள நடிகையான இவர் திரையுலகில் சிறந்த மாடலாகவும் வலம் வந்தார். அந்தவகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 'நெடுநால்வாடை' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


இந்தப் படத்தில் ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு கிராமத்து பெண் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலமாக ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் வெகுவாகப் பெற்றார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'டாணாக்காரன்' என்ற படத்தில் நடித்தார்.


இதனைத் தொடர்ந்து வந்த 'எண்ணித் துணிக' என்ற படத்தில் ஜெய் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரைக்கு வந்தது. இதனையடுத்து 'அவள் வசந்தம்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் முன்னணி ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலி நாயர் பரபரப்பான தகவல் ஒன்றினைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில் "நான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தேன். என் முதல் தமிழ் படத்தின் வில்லன் என்னை தவறாக நடத்த முயன்றார். அந்த படத்தின் துணை தயாரிப்பாளராகவும் அவரே இருந்தார். 


ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார். மேலும் நான் செல்லும் இடமெல்லாம் வந்து என்னை torture செய்வார். ஒருமுறை நான் வைத்திருந்த பையை பிடுங்கி சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர், 'பை வேண்டுமென்றால் வீட்டுக்கு வா' என்று அழைத்தார். நான் அப்போது கேரளாவில் உள்ள என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இது குறித்து என்னுடைய நண்பர்களிடம் சொன்னேன்" என அஞ்சலி நாயர் ஓப்பனாக கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது ஒரு வில்லன் நடிகர் அதே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகையை நிஜத்திலும் கொடுமைப்படுத்தி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement